உலகம்

இந்தியா தொடங்கியதை பாகிஸ்தான் முடித்து வைக்கும்

10/05/2025 04:47 PM

இஸ்லாமாபாத், 10 மே (பெர்னாமா) -- இந்திய தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்திருக்கிறது.

இந்தியா தொடங்கிய இந்த சண்டையை பாகிஸ்தான் முடித்து வைக்கும் என்று அந்நாட்டு இராணுவம் கூறியிருக்கிறது.

''எந்தவொரு நிகழ்விற்கும், அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அது அவர்களின் விருப்பம். நான் முன்பே சொன்னேன், அவர்கள் என்ன செய்தாலும், நாங்கள் அனைத்திற்கும் தயாராக இருக்கிறோம். அவர்கள் அதைத் தொடர விரும்புகிறார்கள் என்றால் சரி. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்கள் தொடங்கியதை நாங்கள் முடிப்போம்,'' என்று பாகிஸ்தான் இராணுவப் பேச்சாளர் அஹ்மாட் ஷெரீஃப் சௌத்ரி கூறினார். 

மேலும், புதன்கிழமை தொடங்கி இந்திய தாக்குதல்களில் பொதுமக்கள் 33 பேர் கொல்லப்பட்டதாகவும் 62 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த இரண்டு நாள்களில் இந்தியாவின் 77 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியா ஏவிய ஏவுகணை ஒன்று இந்திய எல்லைக்குள் விழுந்ததாகவும் சௌத்ரி கூறினார்.

இருப்பினும் அதற்கான ஆதாரங்களை அவர் வழங்கவில்லை.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]