உலகம்

இலங்கையில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது - 21 பேர் பலி

12/05/2025 06:01 PM

கோட் மலை, 12 மே (பெர்னாமா) -- இலங்கையில் பயணிகள் பேருந்து ஒன்று, நேற்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இலங்கை, கதிர்காமத்தில் இருந்து வடமேற்கு நகரமான குருநாகலுக்கு சென்றுக் கொண்டிருந்த அந்த பேருந்தில் 75 பயணிகள் பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் உறுப்பினர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

20 பேர் மட்டுமே பயணிக்க கூடிய அப்பேருந்தில் அதிகமான பயணிகள் பயணித்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)