விளையாட்டு

லிவர்பூலை வீழ்த்தியது செல்சி

05/10/2025 07:25 PM

லண்டன், 05 அக்டோபர் (பெர்னாமா) -- இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண காற்பந்து போட்டி.

இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில், சொந்த அரங்கில் களமிறங்கிய செல்சி 2-1 எனும் கோல் எண்ணிக்கையில் நடப்பு வெற்றியாளரான லிவர்பூலை வீழ்த்தியது.

ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து செல்சி முதல் பாதியை முடித்த வேளையில், லிவர்பூலின் ஒரே கோல் இரண்டாம் பாதியின் 63-வது நிமிடத்தில் போட்டது.

ஆட்டம் 1-1 என்று சமமாகும் என்று கணித்த தருணத்தில், இறுதி நிமிடத்தில் மேலும் ஒரு கோல் போட்டு செல்சி ஆட்டத்தை அதற்குன் சாதகமாக்கி தனது ரசிகர்களை மகிழ்வித்தது.

இதனிடையே, இங்கிலாந்தின் மற்றுமொரு ஜாம்பவான் கிளப்பான மென்செஸ்டர் யூனைடெட் 2-0 எனும் கோல் எண்ணிக்கையில், சண்டர்லென்ட் கிளப்பைத் தோற்கடித்தது.

தனது சொந்த அரங்கமான ஓல்ட் டிரெஃபர்ட்டில் விளையாடிய எம்.யூ அதன் இரு கோல்களையும் முதல் பாதியின் 8 மற்றும் 31-வது நிமிடங்களில் போட்டது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]