பொது

இஸ்ரேல் கைது செய்த 9 தன்னார்வலர்களின் நிலையை விஸ்மா புத்ரா கண்காணித்து வருகிறது

08/10/2025 04:55 PM

கோலாலம்பூர், 08 அக்டோபர் (பெர்னாமா) -- காசாவில் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டிருந்த போது இஸ்ரேல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட MyCARE எனும் மலேசிய மனிதாபிமான அமைப்பின் ஒன்பது தன்னார்வலர்களின் நிலையை விஸ்மா புத்ரா அணுக்காமாக கண்காணித்து வருகிறது.

இஸ்ரேலுடன் அரசதந்திர உறவுகளைக் கொண்ட சில நாடுகளுடன் தொடர்பு வழிகளைப் பயன்படுத்துதல் உட்பட, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள விஸ்மா புத்ரா தயாராக உள்ளதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

''விஸ்மா புத்ரா இந்தப் பிரச்சனையைக் கண்காணித்து வருகிறது. மேலும் உயர் மட்ட மற்றும் இஸ்ரேலுடன் அரசதந்திர உறவுகளைக் கொண்ட பல நாடுகளுடனான உறவுகள் உட்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளது. இஸ்ரேலிய தரப்பு அவற்றைக் கொண்டு வந்து அதே வழியில் செயல்படுத்தினால், நமக்கும் சில கருத்துகள் கிடைக்கும் என்பதால், சில அறிக்கைகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,'' என்றார் அவர்.

விஸ்மா பெர்னாமாவில், இன்று நடைபெற்ற, மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமாவின் மேற்பார்வை மற்றும் நிர்வாக வாரிய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், அன்வார் அவ்வாறு கூறினார்.

சம்பந்தப்பட்ட அனைத்து தன்னார்வலர்களின் நிலை குறித்த விரிவான அறிக்கைக்காக, அரசாங்கம் இன்னும் காத்திருப்பதாகவும், இன்றிரவு அக்சியதா அரேனாவில் நடைபெறும் ஃப்ளோட்டிலா சுமுட் நுசந்தாரா ஒற்றுமை நிகழ்ச்சியின் போது அது குறித்த தெளிவான தகவல் கிடைக்கும் என்றும் அவர் நம்புகிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)