பொது

2026 வரவு செலவுத் திட்டம்; இறுதி தயார்நிலைப் பணிகளைப் பார்வையிட்ட அன்வார்

09/10/2025 05:53 PM

புத்ராஜெயா, அக்டோபர் 09 (பெர்னாமா) -- 2026-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாளை மக்களவையில் சுமுகமான முறையில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர்பார்க்கின்றார்.

நிதி அமைச்சின் இறுதி தயார்நிலைப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர், அவர் தமது எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தினார்.

“அனைத்தும் சிறப்பாக நடைபெற வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான், துணை நிதி அமைச்சர் லிம் உய் யிங், கருவூலத் துறையின் தலைமைச் செயலாளர் டத்தோ ஜொஹான் மஹ்மூட் மெரிக்கன் ஆகியோரும் வருகை புரிந்திருந்தனர்.

வரவு செலவுத் திட்டத்தின் தயார்நிலைப் பணிகளுக்காக நிதி அமைச்சின் சுமார் 320 ஊழியர்கள் தயார்நிலைப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, நாளை தாக்கல் செய்யப்படும் 2026 வரவு செலவுத் திட்டத்தின் பரிந்துரையை மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்.

இஸ்தானா புக்கி துங்குவில், பிரதமர் அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்ததாக மாமன்னரின் முகநூலில் பதிவிடப்பட்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)