கோலாலம்பூர், 08 அக்டோபர் (பெர்னாமா) -- 2026 மடானி வரவு செலவுத் திட்டம் வருடாந்திர நிதி ஆவணம் மட்டுமல்ல.
மாறாக, அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் வரும் ஆண்டுகளுக்கான நாட்டின் வளர்ச்சியின் வழியை பிரதிபலிப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இதன் தொடர்பாக, சீர்திருத்தம் மற்றும் நாட்டின் மாற்றத்திற்கான திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் ஊடகவியலாளர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் வலியுறுத்தினார்.
2026 மடானி வரவு செலவுத் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்க இன்று மதியம் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியதாக அன்வார் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
நான்காவது மடானி வரவு செலவுத் திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் வரும் வெள்ளிக்கிழமை மாலை மணி 4-க்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
மக்களைப் பாதுகாப்பதற்கும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நாட்டின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கும் எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து இந்த வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)