பொது

தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்து ஐந்து முக்கிய கூறுகள் 

08/10/2025 06:18 PM

கோலாலம்பூர், 08 அக்டோபர் (பெர்னாமா) - ஆசியான் முழுவதும் வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்த, நிதி, இலக்கவியல், அதிகாரமளித்தல், நிலைத்தன்மை, தலைமைத்துவம் மற்றும் வட்டார ஒத்துழைப்பு ஆகிய ஐந்து முக்கியக் கூறுகளை, முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சு MITI அடையாளம் கண்டுள்ளது.

2025ஆம் ஆண்டு ஆசியானுக்குத் தலைமையேற்றிருக்கும் மலேசியாவின் நிலையான வளர்ச்சிக்கு அக்கூறுகள் அடித்தளத்தை உருவாக்கும் என்று MITI அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

"பெண்களின் தாக்கம் நமது சமூகத்தின் அனைத்து தூண்களிலும் உணரப்படுகிறது. பெண்கள் துடிப்பான தொழில்முனைவோர், புதுமையான தொழில் தலைவர்கள் மற்றும் வெற்றிகரமான வணிக உரிமையாளர்கள் மட்டுமல்ல. மாறாக, அர்ப்பணிப்புள்ள பொது ஊழியர்கள், திறமையான கொள்கை வகுப்பாளர்கள், சமூகம் மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் அயராத வழக்கறிஞர்கள். வர்த்தகம், தொழில், அரசு மற்றும் இலாப நோக்கமற்ற துறைகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் பல்வேறு கண்ணோட்டங்கள் நமது பொருளாதார எதிர்காலத்தை வடிவமைப்பதை உறுதி செய்கிறோம்," தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற Unleashing the Power of Women in ASEAN: Trade and Industry Across Borders கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றியபோது தெங்கு சஃப்ருல் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)