உலகம்

இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு; பேருந்தில் பயணித்த 15 பேர் உயிரிழப்பு

08/10/2025 07:23 PM

இந்தியா, 08 அக்டோபர் (பெர்னாமா) -- இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய பேருந்தில் பயணித்த 15 பேர் உயிரிழந்த வேளையில் மூவர் காயமடைந்ததாக வட மாநில துணை முதலமைச்சர், முகுல் அக்னிஹோத்ரி தெரிவித்தார்.

மேலும், இன்னும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், மீட்புப் படையினர் அப்பகுதியில் தொடர்ந்து தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

பிலாஸ்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், தனியார் பேருந்தில் பயணித்த 18 பேர் மீட்கப்பட்டதோடு, காயமடைந்த மூவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக முகுல் அக்னிஹோத்ரி கூறினார்.

மேலும், அப்பேருந்தில் மொத்தம் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது இன்னும் உறுதியா தெரியவில்லை.

இதனிடையே, இப்பேரிடரில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதோடு காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)