பெட்டாலிங் ஜெயா, 08 அக்டோபர் (பெர்னாமா) - இந்திய கலைஞர்கள் தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தி விரிவுப்படுத்த உதவும் நோக்கத்தில் MYCREATIVE VENTURE நிறுவனம் MyCV வழங்கி வரும் பல்வேறு கடனுதவிகளை விண்ணப்பிக்க இன்னும் அதிகமான கலைஞர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
மானியங்கள், நிதியுதவி மற்றும் MyCV கடனுதவி திட்டம் வாயிலாக அரசாங்கம் படைப்புத் துறையைத் தொடர்ந்து ஆதரித்து வந்தாலும் மொத்த பெறுநர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்திய சமூகத்தின் ஈடுபாடு இன்னும் குறைவாகவே உள்ளதாகத் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
''இந்த திட்டத்தின் மூலம் மானியங்கள் நிதி உதவிகள் மற்றும் கடன்கள் படைப்பாற்றல் துறையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், இசைக்கலைஞர்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மின்னியல் உள்ளடக்க உருவாக்குநர்களையும், MyCV ஆதரித்து வருகிறது. இம்முயற்சி படைப்பாற்றலை வளர்க்கிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி மற்றும் மலேசியர்களை உள்நாட்டிலும், உலகளாவிய நிலையிலும் வளர்ச்சி அடைவதற்கு வழிவகுக்குகின்றது,'' என்று தியோ நீ சிங் கூறினார்.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் MyCV நிர்வகிக்கும் படைப்பாற்றல் உள்ளடக்க நிதி DKK வழியாக 234 பெறுநர்கள் பயனடைந்துள்ளனர்.
அவற்றில், 206 பெறுநர்கள் தீபகற்பத்தைச் சேர்ந்தவர்கள் சபாவில் இருந்து 16 பேரும் சரவாக்கில் இருந்து 12 பேரும் அந்நிதியைப் பெற்றுள்ளனர்.
இந்தியர்களுக்குச் சொந்தமான எட்டு நிறுவனங்கள் மட்டுமே மொத்தம் 7 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையைப் பெற்றுள்ளன.
மற்றொரு நிலவரத்தில், ஆர்டிஎம்-உம் ஆஸ்ட்ரோ-வும் இணைந்து முதல் முறையாக 'தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டம்' எனும் சிறப்பு தீபாவளி இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வரலாறு படைத்துள்ளன.
தீபாவளியை முன்னிட்டு ஆர்டிஎம் மற்றும் ஆஸ்ட்ரோ இணைந்து தீபாவளி இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து பதிவு செய்திருப்பதை வரலாற்று நிகழ்வாக இன்று நாம் காண்கிறோம். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சி செப்டம்பர் 20ஆம் தேதி ஸ்ரீ அங்காசாபூரி அரங்கத்தில் பதிவு செய்யப்பட்டது என்று தியோ நீ சிங் தெரிவித்தார்.
நேற்று, தீபாவளியை முன்னிட்டு ஆஸ்ட்ரோ மற்றும் ஆர்டிஎம்-உடனான ஒத்துழைப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பில் தியோ நீ சிங் அவ்வாறு கூறினார்.
இந்த இசை நிகழ்ச்சியில், டாக்கி, பாலன் காஷ், சந்தேஸ் மற்றும் சுபீர் கான்
டார்க்கி, பாலன் கேஷ், சந்தேஷ் மற்றும் சுபீர் கான் போன்ற பிரபல கலைஞர்களின் இசைப்படைப்பு, நடனம் மட்டுமின்றி புகழ்பெற்ற இந்திய பாடகர் ஶ்ரீநிவாசின் சிறப்பு நிகழ்ச்சியும் இடம்பெறும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)