கோலாலம்பூர், 10 அக்டோபர் (பெர்னாமா) -- சுகாதார அமைச்சுக்கு இவ்வாண்டு நான்காயிரத்து 530 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்ட வேளையில், 2026-ஆம் ஆண்டு நான்காயிரத்து 650 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டை அவ்வமைச்சு பெற்றுள்ளது.
பொது சுகாதார உள்கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்துவது, பொது மருத்துவமனைகளில் நெரிசல் பிரச்சனையைத் தீர்ப்பது, அதிகரித்து வரும் மருத்துவ பணவீக்கப் பிரச்சனையைத் தீர்ப்பது, ஊழியர் நலன் பிரச்சனைகளைத் தீர்ப்பது மற்றும் மருந்து கையிருப்பின் உத்தரவாதத்தை அதிகரிப்பது ஆகியவை இந்த ஒதுக்கீட்டில் அடங்கும்.
''அரசாங்கத்தின் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சையகங்கள் 1,200 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டில் பராமரிக்கப்பட்டுப் புதுப்பிக்கப்படும். நாடு முழுவதும் உள்ள மாவட்ட மருத்துவமனை வார்டுகள் 10 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டில் மேம்படுத்தப்படும். காலாவதியான மருத்துவ உபகரணங்கள் 75 கோடியே 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டில் மாற்றப்படும்'',.என்றார் அவர்.
பொது மருத்துவமனைகள், பொது சுகாதார சிகிச்சையகங்கள், தாய் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சையகங்கள், சமூக சிகிச்சையகங்கள் மற்றும் உட்புற பகுதி சிகிச்சையகங்களில், 65 கோடி ரிங்கிட் செலவில், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் இணைய இணைப்பை அதிகரிக்கும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)