கோலாலம்பூர், 10 அக்டோபர் (பெர்னாமா) -- டிவெட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி திட்டத்திற்கு, 2026ஆம் ஆண்டில் 790 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
"டிவெட் கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகள் அதிகரிக்கப்படுகின்றன. குறிப்பாக, தேசிய டிவெட் மன்றம், எச்.ஆர்.டி கோர்ப் போன்ற அதிக முக்கியத்துவம் கொண்ட துறைகளை ஆதரிப்பதில் நிச்சயம் அதிக தொகை அதாவது 300 கோடி ரிங்கிட். இலக்கவியல் மற்றும் தொழில்நுட்ப துறை உட்பட பயிற்சிகள் அளிக்க பிடிபிகே-விற்கு 65 கோடி ரிங்கிட். கிக் தொழிலாளர்கள் உட்பட கவனத்தில் கொள்ளப்படும் குழுவைச் சேர்ந்த 13,000-கும் மேற்பட்டோருக்கு கியாட்மாரா பயிற்சி அளிக்கிறது." என்று பிரதமர் கூறினார்.
2025ஆம் ஆண்டில், டிவெட்டிற்கு 750 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருந்ததை டத்தோ ஶ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.
அதைத் தவிர்த்து, தனியார் துறையின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக டிவெட் பயிற்சியாளர்கள் மாதத்திற்கு குறைந்தபட்ச அலவன்ஸ் 1,500 ரிங்கிட்டைப் பெற வழிவகுக்கும் இணை ஊதிய தொழில்துறை பயிற்சி திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
அரசாங்கமும் தொழில்துறையும் இணைந்து இத்திட்டத்திற்கான நிதியை வழங்கவுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)