பொது

2025 அம்னோ பொதுப்பேரவை அடுத்தாண்டு ஜனவரி 14 முதல் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

17/10/2025 06:44 PM

கோலாலம்பூர், 17 அக்டோபர் (பெர்னாமா) -- இவ்வாண்டு நவம்பர் 26 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த 2025-ஆம் ஆண்டு அம்னோ பொதுப்பேரவை, அடுத்தாண்டு ஜனவரி 14 முதல் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 15 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் 17-வது சபா மாநிலத் தேர்தலுடன் முரண்பட்டதைத் தொடர்ந்து அம்னோ பொதுப்பேரவை ஒத்திவைக்கப்பட்டதாக அக்கட்சியின் பொது செயளாலர் டத்தோ டாக்டர் அஸ்ராஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.

சபா மாநில மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கும், அரசாங்கத்தை மீட்டெடுப்பதற்கும் மற்றும் மாநில மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் நாடு தழுவிய அளவில் உள்ள அம்னோ தலைமைத்துவமும் தேர்தல் கேந்திரமும் உதவ முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

17-வது சபா மாநிலத் தேர்தல் நவம்பர் 29-ஆம் தேதி நடைபெறும் என்றும் அதற்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 15-ஆம் தேதி நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம், SPR நேற்று அறிவித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)