விளையாட்டு

தீபாவளி பரிசு அளித்த மான்செஸ்டர் யுனைடெட்

20/10/2025 06:18 PM

லிவர்பூல், அக்டோபர் 20 (பெர்னாமா) -- இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து போட்டிக்கான நேற்றைய ஆட்டத்தில், லிவெர்பூலை  அதன் சொந்த அரங்கில்  2-1 என்ற கோல்களில் வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் தனது ரசிகர்களுக்குத் தீபாவளி பரிசு அளித்துள்ளது.

ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே மான்செஸ்டர் யுனைடெட் முதல் கோலை அடித்து லிவெர்பூல் ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.

முதல் பாதி ஆட்டம் மான்செஸ்டருக்கு சாதகமாக அமைய, இரண்டாம் பாதி ஆட்டம் விருவிருப்பாகத் தொடங்கியது.

இரு அணிகளுமே கோல் வேட்டையில் ஈடுபட்ட வேளையில், லிவெர்பூல் ஒரு கோலை அடித்து ஆட்டத்தை சமப்படுத்தினார்.

வெற்றிக் கோலுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நேரத்தில், மான்செஸ்டர் தனது அணிக்கான வெற்றி கோலை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

இவ்வாட்டத்தில் தோல்வி கண்டாலும், புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் லிவெர்பூல் நான்காவது இடத்திலும், 13 புள்ளிகளுடன் மான்செஸ்டர்  ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)