பொது

1963ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தத்தின் கீழ் சபாவில் 13 கோரிக்கைகளுக்குத் தீர்வு - அன்வார்

22/10/2025 06:02 PM

ஜாலான் பார்லிமன், 22 அக்டோபர் (பெர்னாமா ) -- சபா மாநிலத்திற்கான MA63 எனப்படும் 1963ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தம் தொடர்பான பல விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதில் மடானி அரசாங்கம் நேர்மறையான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோஃப் தலைமையிலான 1963ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்த அமலாக்க நடவடிக்கை மன்றத்தின் கீழ் தொழில்நுட்ப செயற்குழு வழியாக MA63ரின் கீழ் 13 கோரிக்கைகளுக்குத் தீர்வுக் காணப்பட்டதாகப் பிரதமர் தெளிவுப்படுத்தினார்.

மத்திய மற்றும் சபா அரசாங்கம் ஒப்புக் கொண்ட கோரிக்கைகளில் மின்சார ஒழுங்குமுறை அதிகாரங்கள் மற்றும் சபா மின்சார நிறுவனம் ஆகியவற்றை சபா அரசாங்கத்திடம் ஒப்படைப்பது அடங்கும். மேலும், சபாவில் மின்சார விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக மத்திய அரசாங்கம் 120 கோடி ரிங்கிட்டை வழங்கியுள்ளது," என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இன்று மக்களவையில் சபாவிற்கு மத்திய அரசாங்கத்தின் சிறப்பு ஒதுக்கீடு தொடர்பான மடானி அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்த விளக்கக் கூட்டத்தில் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)