கோலாலம்பூர், 27 அக்டோபர் (பெர்னாமா) - கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி, தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் டத்தோ ஹஷிம் ஹம்சா தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதி குழு, அந்த ஒருமித்த தீர்ப்பை அளித்தது.
நாடாளுமன்றத் தொகுதிக்கான ஒதுக்கீட்டை நிறுத்தியுள்ள அரசாங்கத்தின் முடிவை எதிர்க்கும் நோக்கில், சைட் சாடிக்குடன் நஜிப் அபு நாவார், முகமட் பகிருட்டின் அப்துல்லா மற்றும் முகமட் பாத்ஸ்லி பிஸ்ரி ஆகியோர் செய்த விண்ணப்பத்தை, கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இவ்வழக்குக்கான தீர்ப்பு 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி வழங்கப்பட்ட வேளையில், அதற்கான மேல்முறையீடு 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதிக்கும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அந்த நால்வரின் மேல்முறையீட்டுக்கான விண்ணப்பம் கடந்த ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி செய்யப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)