கோலாலம்பூர் , 24 அக்டோபர் (பெர்னாமா) -- ஆசியான் பொருளாதார சமூக மன்றம் ஏஇசிசி தனது வழிகாட்டிகள் மற்றும் தீர்மானங்களை குறிப்பிட்ட உயர்ந்த முன்னுரிமை கொண்ட விவகாரங்களில் கவனம் செலுத்துவதோடு அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட விஷயங்களில் தலையீட்டைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அணுகுமுறை மன்றத்தின் முயற்சிகளை மிகவும் நெறிப்படுத்தப்பட்ட மற்றும் திறமையான நிர்வாகமாக உறுதி செய்யும் என்று முதலீடு வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் கூறினார்.
"இது மிகவும் நெறிப்படுத்தப்பட்ட மற்றும் திறமையான நிர்வாகத்தை உறுதி செய்வதாகும். ஆசியான் அரசியல் மன்றத்திற்கும் தொடர்ந்து 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஏஇசிசியின் ஒப்புதலுக்கும்த் தேவைப்படும் அம்சங்கள் மீதும் நாங்கள் இன்று முக்கியத்துவம் அளித்தோம்," என்று தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு 26வது ஏஇசிசி கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய தெங்கு டத்தோ அவ்வாறு தெரிவித்தார்.
மேலும், 2025ஆம் ஆண்டுக்கான முன்னுரிமை பொருளாதார இலக்குகள் ஆசியான் பொருளாதார ஒருங்கிணைப்பை நோக்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் விவரித்தார்.
மேம்படுத்தப்பட்ட ஆசியான் பொருள் வர்த்தக ஒப்பந்தம் ATIGA ஆசியான் இலக்கவியல் பொருளாதார கட்டமைப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை 3.0 ஆசியான்–சீனா தடையற்ற வாணிப ஒப்பந்தம் கையெழுத்திடுதல் ஆகியவை,
47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின்போது அறிவிக்கப்படும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)