கூலிம் கெடா, அக்டோபர் 25, (பெர்னாமா) -- முதற்கட்ட வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட கூலிம் மாவட்ட பொது தற்காப்பு படை, ஏ.பி.எம் உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை உட்பட பல்வேறு சவால்களை எதிர்கொண்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தற்காலிக நிவாரண மையங்களுக்கு மாற்ற வேண்டியிருந்ததால் இந்நிலைமை ஏற்பட்டதாக கூலிம் மாவட்ட பொது தற்காப்பு படை உதவி இயக்குநர் லெஃப்டனன் அஸ்மான் அமாட் தெரிவித்தார்.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை J-B-P-M மற்றும் போலீசின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் நிலைமை சமாளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
"முன்பு, கடந்த இரண்டு வருடங்கள் இவ்வளவு பெரியதாக இல்லை. இந்த முறை நாங்கள் கிட்டத்தட்ட நிவாரண மையத்தை நோக்கிச் சென்றுவிட்டோம். ஆரம்பத்தில் எங்களுக்குச் சொத்துக்களும் மனிதவளமும் இல்லை", என லெஃப்டனன்ட் அஸ்மான் அமாட் கூறினார்.
கூலிம் மாவட்டத்தில் வெள்ளப் பேரிடரை நிர்வகிக்க பல்வேறு நிறுவனங்களும் உதவியதாகவும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஏபிஎம், தனது பணியாளர்களையும் அனுப்பியதாகவும் அவர் கூறினார்.
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)