பொது

சாலை விபத்தில் உயிரிழந்த நால்வர்

25/10/2025 05:56 PM

தங்காக், 25 அக்டோபர் (பெர்னாமா) -- தங்காக், பண்டார் பாரு சாகிலுக்கு அருகில் உள்ள ஜாலான் மூவார் சிகாமட்டின் 32.5ஆவது கிலோமீட்டரில் நேற்றிரவு ஏற்பட்ட சாலை விபத்தில் இளம்பெண் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்தனர்.

மூன்று மோட்டார்சைக்கிள்கள் மற்றும் பெரோடுவா மைவி ரக வாகனத்தை உட்படுத்திய இவ்விபத்து இரவு மணி 10.20க்கு நிகழ்ந்தது.

இவ்விபத்தில் இரு ஆடவர்களும் இளம் பெண் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழத்த வேளையில் மேலும் 19 வயதுடைய மற்றொரு இளைஞர் தாங்காக் மருத்துவமனையில் உயிரிழந்ததாகத் தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரின்டென்டன் ரோஸ்லான் முஹமட் தாலிப் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் மோட்டார்சைக்கிளோட்டிகளும் அதில் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர்களும் ஆவர்.

அதோடு, மைவி கார் ஓட்டினருக்கும் பயணிக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று ரொஸ்லான் தெரிவித்தார்.

1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் செக்‌ஷன் 41(1)இன் கீழ் மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

''இவ்விபத்துக் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் திரையில் காணும் எண்ணிலோ அருகிலுள்ள போலீஸ் நிலையத்துக்குச் சென்றோ தகவல் தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்,'' என்று இன்ஸ்பெக்டர் கைருல் அஸ்மி இப்ராஹிம் கூறினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)