உலகம்

உத்தர பிரதேச நெடுஞ்சாலையில் சாலை விபத்து; பலி எண்ணிக்கை 13-ஆக அதிகரிப்பு

17/12/2025 04:19 PM

உத்தர பிரதேச, டிசம்பர் 17 (பெர்னாமா) -- இந்தியா உத்தர பிரதேசத்தில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது.

டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் நிகழ்ந்த இவ்விபத்திற்குக் குளிர்கால மூடுபனியினால் தெரிவுநிலை குறைந்ததே காரணம் என்று உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

விபத்துக்குள்ளான வாகனங்கள் தீப்பிடித்த வேளையில் அந்த வாகனங்களில் சிக்கியவர்களை மீட்க அப்பகுதியில் இருந்தவர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர்.

விபத்து குறித்த தகவல்கள் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் உள்ளிட்ட அவசரகால மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மதுரா மாவட்ட மாஜிஸ்திரேட், சந்திர பிரகாஷ் சிங், இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீட்டை தொகையை அறிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)