கோலாலம்பூர், 25 அக்டோபர் (பெர்னாமா)-- இரு அரசாங்கங்களுக்கிடையில் பரஸ்பர வரிகள் மற்றும் வர்த்தக வசதிகள் குறித்து விவாதங்கள் தொடர்வதால் அமெரிக்காவுடன் விரைவில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் மலேசியா நம்பிக்கையுடன் உள்ளது.
அந்த ஒப்பந்தம் தற்போது இரு தரப்பினராலும் சட்டப்பூர்வ ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் வழக்கறிஞர்கள் கையெழுத்திடுவதற்கு முன்பு தொழில்நுட்ப விவரங்களை இறுதி செய்வதாகவும் முதலீடு வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ தெங்கு சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
"நமக்கு இன்னும் 24 மணிநேரம் இருக்கிறது. நாங்கள் இருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். இப்போது வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அதனால் நிறைய சட்டரீதியான அம்சங்கள் உள்ளன. ஆனால், நாங்கள் இதை முடிக்க விரும்புகிறோம் என்று நம்புகிறோம். மேலும், நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்த ஒப்பந்தம் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் எழுப்பியுள்ள பல பிரச்சினைகளுக்கு இது உறுதியளிக்கும் என்று நான் நினைக்கிறேன்." என்றார் அப்துல் அசிஸ்
இன்று நடைபெற்ற 2025 ஆசியான் வணிகம் மற்றும் முதலீட்டு உச்சநிலை மாநாடு ABIS-இல் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் போது டத்தோ ஶ்ரீ தெங்கு சஃப்ருல் இவ்வாறு கூறினார். புதிய ஒப்பந்தத்தின் கீழ் சில கட்டண வரிகளுக்கு விலக்கு அளிக்கப்படலாம் என்றாலும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கையொப்பமிட்ட பிறகும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)