பொது

மகளிர் சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்த இலக்கு

25/10/2025 06:45 PM


புத்ராஜெயா, அக்டோபர் 25, (பெர்னாமா) -- மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் முக்கியத்துவம் பற்றிய பெண்களின் விழிப்புணர்வு தற்போது, நாட்டில் 10 பேரில் எழுவரிடமே உள்ளது.

எனினும், தடுப்பு நடவடிக்கையாக, அதிகமான பெண்கள் ஆரம்பக்கட்ட சோதனைகளில் உட்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, அது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.

"10-க்கு 7 என்பது இன்றைய பெண்களின் விழிப்புணர்வு நிலை. அதை இன்னும் உயர்த்த நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். அடுத்து, சிறந்த செயல்திறனை அடைவது. தற்போது, பத்தில் 7. சரி. மிகவும் நல்லது. ஆனால் நான் திருப்தி கொள்ளவில்லை. சரி. நான் பரிசோதனை நடவடிக்கைகளை அதிகரிக்க விரும்புகிறேன். மேலும் NH தேசிய சுகாதார பரிசோதனை திட்டத்திக் கொண்டுவருவேன். அதை விரிவுபடுத்துவோம், அவற்றில் மார்பகப் புற்றுநோய் உள்ளது," என டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் கூறினார்.

இன்று காலை, புத்ராஜெயாவின் வவாசன் சதுக்கத்தில் நடைபெற்ற பிங்க் ரிப்பன் ர
ன் 2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அவ்வாறு கூறினார்.

நாட்டில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான மார்பகப் புற்றுநோய்கள் தாமதமான நிலையில், அதாவது மூன்று மற்றும் நான்காம் நிலைகளில் கண்டறியப்படுகின்றன.

இது சிகிச்சையை மிகவும் சிக்கலாக்குவதோடு உயிர்பிழைப்பதற்கான வாய்ப்புகளையும் பாதிப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)