பொது

ஆசியான்47: மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியா வந்தடைந்தார் டிரம்ப்

26/10/2025 01:14 PM

கோலாலம்பூர், 26 அக்டோபர் (பெர்னாமா) -- 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக மலேசியா வந்தடைந்துள்ளார். 

டிரம்ப்பை ஏற்றிக்கொண்டு வாஷிங்டனில் இருந்து புறப்பட்ட ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம், இன்று காலை சுமார் 9.54 மணியளவில்  கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் KLIA-வின்  புங்கா ராயா வளாகத்தில் தரையிறங்கியது. 

அவர்ரை  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார்.

ஆசியான் 2025-தின் தலைவராக  மலேசியா பொறுப்பெற்றிருக்கும் வேளையில், பிரதமர் அன்வாரின் அழைப்பின் பேரில் டிரம்ப் மலேசியாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். 

இவ்வாண்டு ஜனவரியில், அமெரிக்காவின் 47 வது அதிபார தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தென்கிழக்கு ஆசிய வட்டாரத்திற்கு டிரம்ப்  மேற்கொண்ட முதல் பயணமும் இதுவாகும். 

இதனிடையே, அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மலேசிய நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடியது கவனம் ஈர்த்தது.

பாரம்பரிய நடனக் கலைஞர்களின் இசையில் ஈர்க்கப்பட்ட அவர், அதன் தாளத்திற்கு நடனமாடிய போது, பிரதமர் அன்வார் இப்ராஹிமும் டிரம்புடன் இணைந்துக் கொண்டது அனைவரின் கவனத்தையும் பெற்றது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)