கோலாலம்பூர், 26 அக்டோபர் (பெர்னாமா) -- தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே சர்ச்சைக்குரிய எல்லையில் அமைதியை மீட்டெடுக்கும் விதமாக போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதில் மலேசியாவின் பங்களிப்பை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பாராட்டினார்.
போர் நிறுத்ததிற்காக மலேசியாவின் அரச தந்திரத்தை அங்கீகரிக்கும் விதமாக தமது வட்டார பயணங்களில் மலேசியாவையும் சேர்க்க முடிவும் செய்திருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
"மலேசியா இதில் ஈடுபட்டிருந்தது. உண்மையில், நான் மலேசியா செல்வதற்கு இதுவும் ஒரு காரணம். மலேசியத் தலைவர் மிகவும் நல்லவர் என்று நான் கூறியிருந்தேன். அதற்காகத்தான் மலேசியாவில் தங்குகிறோம்," என்றார் அவர்.
47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்காக வாஷிங்டனில் இருந்து புறப்பட்ட டிரம்ப் Air Force One விமானத்தில் செய்தியாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)