பொது

அமைதியை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர் - பிரதமர் நினைவுறுத்தல்

31/10/2025 07:22 PM

ஜியோங்ஜு, 31 அக்டோபர் (பெர்னாமா) -- அமைதியை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்கு தாய்லாந்து - கம்போடியா இடையிலான கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தம் ஒரு கடுமையான நினைவூட்டலாகும்.

மேலும், காசா மற்றும் உக்ரேனில் இன்னும் என்ன நடக்கிறது என்பதை ஏபெக் பொருளாதாரங்களுக்கு நினைவூட்டுவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய அவர் வட்டார அளவிலான உரையாடல்களும் ஒத்துழைப்புகளும் பயனுள்ளதாக மட்டுமல்லாமல் அவசியமானதாகவும் இருக்கும் என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.

"அமைதியை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தம் நினைவூட்டுகிறது. காசாவுக்கும் உக்ரேனுக்கும் இதுவே பொருந்தும். அமைதியும் முன்னேற்றமும் உரையாடல் மற்றும் நம்பிக்கை மூலம் வளர்க்கப்பட்டு நிலைநிறுத்தப்பட வேண்டும்," என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இன்று நடைபெற்ற விருந்தினர்களுடனான ஏபெக் பொருளாதாரத் தலைவர்களின் உரையாடலில் மலேசியாவின் தலையீட்டின் போது டத்தோ ஶ்ரீ அன்வார் அவ்வாறு குறிப்பிட்டார்.

அந்த இரண்டு ஆசியான் உறுப்பினர்களுக்கு இடையேயான அமைதி ஒப்பந்தத்தில் நடுவராக இருந்து செயல்பட்டதில் மலேசியா முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் இது அமெரிக்கா மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகளிடமிருந்து தொடர்ந்து பாராட்டைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)