பொது

12 வயது சிறுமி கங்காதேவியைக் காணவில்லை

01/11/2025 07:16 PM

கோலாலம்பூர், 01 நவம்பர் (பெர்னாமா) -- நேற்று வெள்ளிக்கிழமை பூச்சோங், செக்‌ஷன் 3, தாமான் கின்றாரா என்ற முகவரியில் உள்ள விஸ்தா லெவென்டர் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வெளியில் சென்றபோது காணாமல் போனதாக நம்பப்படும் வி. கங்காதேவி என்ற சிறுமியைக் கண்டுபிடிப்பதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பைப் போலீஸ் நாடுகிறது.

145 சென்டிமீட்டர் உயரமுடைய அந்த 12 வயது சிறுமி கறுத்த நிறம் மற்றும் நீளமான கருங்கூந்தல் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

சிறுமியைப் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்திலோ அல்லது 03-80762222 என்ற எண்ணில் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் எம். சிவாநந்தாவிடமோ தகவல் வழங்குமாறு செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் முஹமாட் ஃபரிட் அஹ்மட் கேட்டுக் கொண்டார். 

இதனிடையே, கடந்த வியாழக்கிழமை பண்டார் பூச்சோங் ஜெயாவில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது சிறுவன் முஹமாட் இஸ்கண்டார் சுல்கர்னாயின் அப்துல்லாவும் காணாமல் போயிருப்பதால் அவனையும் போலீசார் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)