பொது

ஓ.பி.ஆர் விகிதத்தை 2.75 விழுக்காடாக நிலைநிறுத்த பி.என்.எம் முடிவு

06/11/2025 06:19 PM

கோலாலம்பூர், 6 நவம்பர் (பெர்னாமா) -- ஒ.பி.ஆர் எனப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் 2.75 விழுக்காடாக தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆதரவு மற்றும் நிலையான விலை சூழலுக்கு ஏற்ப இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக பேங்க் நெகாரா மலேசியா பி.என்.எம்மின் நாணயக் கொள்கை குழு எம்-பி-சி இம்முடிவை செய்துள்ளது.

அண்மைய வளர்ச்சியை பேங்க் நெகாரா மலேசியா தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், உள்நாட்டு வளர்ச்சி மற்றும் பணவீக்கம் தொடர்பான இடர்களின் சமநிலை மதிப்பிடப்படும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் பி.என்.எம் தெரிவித்திருக்கிறது.

கணித்ததை விட மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

தொடர்ச்சியான உள்நாட்டு தேவை மின்சாரம் மற்றும் மின்னணுவியல் ஏற்றுமதிகள் மற்றும் பொருள்களின் உற்பத்தியில் மீட்சி ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சி உந்தப்பட்டதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டு ஜூலை முதல் ஒ.பி.ஆர் அடிப்படை விகிதத்தை 2.75 விழுக்காடாக பி.என்.எம் நிர்ணயித்து வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)