கோலாலம்பூர், 08 நவம்பர் (பெர்னாமா) -- சமூக ஊடகத்தில் பிரபலமாக இருக்கும் ஆடவர் ஒருவர், டிக் டோக் செயலியில் ஆபாச வார்தைகளால் தமக்கு அவமரியாதையை ஏற்படுத்தியதாக, ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
டங் வாஙி போலீஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து புகார் கிடைத்ததை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபடில் மர்சுஸ் உறுதிப்படுத்தினார்.
இச்சம்பவம் குறித்து, குற்றவியல் சட்டம் செக்ஷன் 509, 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்ஷன் 233-இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
தமது பாதுகாப்பு குறித்து வருத்தம் தெரிவித்தவர்களின் அறிவுறையின்படி புகார் அளிக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட அப்பெண் 'Threads' பதிவில் குறிப்பிட்டிருந்ததை மேற்கோள்காட்டி ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தன.
முன்னதாக, ‘Hazren Rich Empire’ என்ற கணக்கு மூலம் ஆடவர் ஒருவர், உணவகம் ஒன்றிலிருந்து சம்பந்தப்பட்ட பெண்ணை அவரின் அனுமதியின்றி பதிவு செய்ததோடு, ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி நேரலையாக பேசிய காணொளி பரவலாகப் பகிரப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)