புத்ராஜெயா, 7 நவம்பர் (பெர்னாமா) -- மோசடி மற்றும் இணைய சூதாட்டம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை விளம்பரப்படுத்துவதன் மூலம் தனது லாபத்தில் 10 விழுக்காடு வருமானம் ஈட்டுவதாக அனைத்துலக செய்தி நிறுவனம் Reuters வெளியிட்ட செய்தி தொடர்பில் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான Meta முழு விளக்கத்தை அளிக்க வேண்டும்.
மலேசிய சட்டத்திற்குப் புறம்பான சட்டவிரோத நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட விளம்பரங்களில் இருந்து Meta அந்த வருமானத்தை ஈட்டுவதாக கூறப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
அந்த செய்தி தொடர்பில் Meta தரப்பிடம் இருந்து இதுவரை நம்பிக்கையூட்டும் எந்த அறிக்கையும் வரவில்லை.
மாறாக, குறிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்கள் உண்மையான சூழலில் இல்லை என்பதை அது மறுத்துள்ளதாக ஃபஹ்மி தெரிவித்தார்.
அதோடு, இவ்விவகாரம் தொடர்பாக Meta-விடம் முழு விளக்கத்தை அளிக்குமாறு கேட்பதற்கு தமது தரப்பும் அந்த செய்தியை ஆய்வு செய்யும் என்றும் அவர் கூறினார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)