கிள்ளான், 08 நவம்பர் (பெர்னாமா) -- புக்கிட் திங்கி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உள்நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இரவு மணி 11 அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவர் காரின் முன்பக்கத்தை நோக்கி பல துப்பாக்கிச் சூடுகளை நடத்தி, முன்பக்கத்தில் அமர்ந்திருந்த 34 வயது பாதிக்கப்பட்டவரை தாக்கியதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் தெரிவித்தார்.
தெற்கு கிள்ளான் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து பொதுமக்களிடமிருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் தகவல்கள் தெரிந்த பொதுமக்கள், குற்றப் புலனாய்வு மூத்த அதிகாரி ஏ.எஸ்.பி அமினுடின் மஹாடியை 013-2104006 என்ற எண்ணில் அல்லது தெற்கு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் நடவடிக்கை அறையை 03-33762222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
முன்னதாக, சுடப்பட்டதாக நம்பப்படும் காயமடைந்த ஒருவரை, சுகாதாரப் பணியாளர்கள் சிகிச்சைக்காக கொண்டுச் செல்லும் காணொளி பதிவு பரலாக பகிரப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)