பொது

பட்டவெர்த்தில் மின்சார ரயில் விபத்து; கே.டி.எம் பி உறுதிப்படுத்தியது

08/11/2025 04:57 PM

பட்டர்வெர்த், 08 நவம்பர் (பெர்னாமா) -- இன்று பினாங்கு பட்டர்வெர்த் நிலையத்தில், ஆறு பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் ஒன்று, தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானதை 'Keretapi Tanah Melayu' நிறுவனம், கே.டி.எம்.பி உறுதிப்படுத்தியது.

காலை மணி 6.01 அளவில் நிகந்த இச்சம்பவத்தின் போது, தினசரி சேவையில் ஈடுபட்டிருந்த அந்த ரயிலில், பயணிகள் இல்லை என்றும், காயம் அல்லது உயிரிழப்பு சம்பவங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் கே.டி.எம்.பி வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி தெரிவித்தது.

சம்பவம் நிகழ்ந்த உடனே கே.டி.எம்.பி-இன் தொழில்நுட்பக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மேலும், அப்பகுதியில் பாதுகாப்பையும் ரயில் நிலையத்தின் செயல்பாடு சீராக உள்ளதையும் உறுதி செய்வதற்கு ரயில் பெட்டிகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

விபத்து ஏற்பட்டதற்கா காரணத்தை கண்டறிய மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)