விளையாட்டு

டபிள்யூ-டி-ஏ டென்னிஸ் போட்டி; கிண்ணம் வென்று ரைபாகினா சாதனை

09/11/2025 06:09 PM

ரியாத், 09 நவம்பர் (பெர்னாமா) -- டபிள்யூ-டி-ஏ டென்னிஸ் போட்டியின் கிண்ணத்தை வென்று எலெனா ரைபகினா சாதனை படைத்திருக்கிறார்.

நேற்றிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்காவைத் தோற்கடித்து டென்னிஸ் ரசிகர்களைப் ரைபகினா அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இவ்வாட்டத்தில் பெலாருசின் அரீனா சபலென்கா வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டிருந்தாலும் முதல் செட்டிலியே 6-3 என்ற புள்ளிகளில் அவரைப் ரைபகினா தோற்கடித்தார்.

அதன் பின்னர் இரண்டாம் செட்டில் இரு விளையாட்டாளர்களும் கடுமையான போட்டியைச் சந்தித்த போதிலும் ரைபகினா 7-6 என்று வெற்றி பெற்று கிண்ணத்தைத் தன்வசமாக்கினார்.

கிண்ணத்துடன் கஸகஸ்தானைச் சேர்ந்த ரைபகினாவுக்குப் பரிசுத் தொகையாகச் சுமார் 52 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)