லங்காவி, 10 நவம்பர் (பெர்னாமா) -- நேற்று, மலேசியா-தாய்லாந்து எல்லை அருகே சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் படகு மூழ்கி விபத்துக்குள்ளான சம்பவத்தில் மேலும் அறுவரின் உடல்களை தாய்லாந்து அதிகாரிகள் மீட்டனர்.
இதுவரை 26 பேர் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர்களில் 13 பேர் உயிரிழந்ததாகவும் எஞ்சிய 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கெடா மற்றும் பெர்லிஸ் மாநில கடல்சார் அமலாக்க இயக்குநர் ரொம்லி முஸ்தாஃபா கூறினார்.
''தாய்லாந்து தரப்பில், அவர்களும் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். அங்கு நாங்கள் அறுவரின் உடல்களைக் கண்டெடுத்தோம். யாரும் உயிருடன் இல்லை. இன்று இந்த பகுதியில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுப்பிடிப்போம் என்று எதிர்பார்க்கின்றோம். ஏனென்றால், தருதாவ் தீவிலிருந்து வரும் போக்கு, முறை, நீரோட்டத்தின் படி ஆகியவை மலேசிய நீரிந்லைகளுக்குக் கொண்டு வருகிறது'', என்றார் அவர்.
கடலின் நீரோட்டம் பாதிக்கப்பட்டவர்களை விழுந்த இடத்திலிருந்து இழுத்து செல்ல வாய்ப்புள்ளதால் தேடல் பகுதி விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக ரொம்லி முஸ்தாஃபா கூறினார்.
இதனிடையே, தருதாவ் தீவின் தெற்கு நீரினையில் மலேசிய நடவடிக்கை குழுவும் வடக்குப் பகுதியில் தாய்லாந்து அதிகாரிகளும் கவனம் செலுத்தி வருவதாக அவர் விவரித்தார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி மீட்கும் நடவடிக்கை, இரண்டாம் நாளாக இன்று காலை மணி 7.30-க்கு தொடங்கப்பட்டதாக, மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் மரித்திம் மலேசியா ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தது.
KM Siangin, PERKASA 1224, PETIR 81, PERKASA 1226 மற்றும் CL 415 - SUMS APMM என சுமார் ஐந்து மலேசிய கடல்சார் சொத்துகளும், ஆறு நிறுவனங்களும் இந்நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]