வடகிழக்கு ஜப்பான், 10 நவம்பர் (பெர்னாமா) -- பசபிக் பெருங்கடலில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் ஆழம் கொண்ட நிலநடுக்கம் வடகிழக்கு ஜப்பானில் அபாயகர சுனாமியை உண்டாக்கியுள்ளது.
இதனால் கடலோரப் பகுதிகளில் வசித்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதுடன், ஷிங்கன்சென் விரைவு இரயில் சேவையிலும் தற்காலிக இடையூறு ஏற்பட்டது.
நேற்று மாலை மணி 5.03-க்கு சன்ரிகு கடற்கரைப் பகுதியில் 16 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்தது 6.7 ரிக்டர் அளவை உட்படுத்தி முதல்கட்ட ஆய்வை மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்ட ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம், இவாட் மாகாணத்திற்கு ஒரு மீட்டர் சுனாமி எச்சரிக்கையையும் விடுத்திருந்தது.
இவாட் மற்றும் மியாகி மாகாணங்களின் பல பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஜப்பானிய நில அதிர்வு தீவிர அளவுகோலில் நான்காகப் பதிவாகினாலும் எவ்வித காயங்களோ அல்லது சொத்துடைமை சேதங்களோ பதிவாகவில்லை.
அதனால் முன்னதாக அப்பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கையும் வெளியேறுவதற்கான உத்தரவும் மீட்டுக் கொள்ளப்பட்டது.
இதனிடையே, குஜி மற்றும் ஓஃபுனாத்தோவில் 20 சென்டிமீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் பதிவாகின.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)