ஜப்பான், டிசம்பர் 12 (பெர்னாமா) -- ஜப்பானில் ரிக்டர் அளவைக் கருவியில் 6.7ஆக பதிவாகிய நிலநடுக்கத்தினால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சில மணி நேரங்களில் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
காலை 11:44 மணிக்கு அமோரி மாகாணத்தின் கடற்கரை பகுதியில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையமிட்டிருந்தது.
இதனால் ஒரு மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
கடந்த திங்கட்கிழமை அதே வட்டாரத்தில் ரிக்டர் அளவைக் கருவியில் 7.5ஆக பதிவாகிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு ஒரு வாரத்திற்குள் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதால் வடக்கே ஹொக்கைடோ முதல் தோக்கியோவின் கிழக்கே உள்ள சிபா வரை வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அரசாங்கம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)