பொது

இளம் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கவே போட்டியிடுவதிலிருந்து அப்துல் ரஹ்மான் விலகல் - சாஹிட்

16/11/2025 06:14 PM

 கோத்த பெலுட், 16 நவம்பர் (பெர்னாமா) -- வரும் 17வது சபா மாநிலத் தேர்தலில் தெம்பாசோக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதிலிருந்து விலகி இருக்கும் டத்தோ ஶ்ரீ அப்துல் ரஹ்மான் டஹ்லானின் முடிவு தேசிய முன்னணி கட்சி தே.முவில் எந்தவொரு பிரச்சனையினாலும் அல்ல என்று அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தீர்க்கமாகக் கூறினார்.

சபா மாநில அம்னோ முன்வைத்த இளம் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கும் வகையிலான கலந்துரையாடல் ஒன்றுக்குப் பிறகு டத்தோ ஶ்ரீ அப்துல் ரஹ்மான் அம்முடிவை எடுத்ததாக அவர் தெளிவுபடுத்தினார்.

''அவர் என்னைச் சந்தித்தார். அதற்கு முன்பு அவர் என்னை அழைத்து தமது விலகல் கோரிக்கையை முன்வைத்தார். இரண்டு நாள்களுக்கு முன்பு அவர் என்னுடனும் வேட்பாளருடனும் துவாரனில் இருந்தார். இன்று நான் கோத்தா பெலூட்டுக்கு வந்துள்ளேன். நேற்று அப்துல் ரஹ்மான் வேட்பாளருடன் கோட்டா பெலூட் வந்தார். தேசிய முன்னணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை,'' என்றார் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி. 

இன்று சபா, கோத்த பெலுட்டில் தொழில் பாதுகாப்பு எனும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)