கோலாலம்பூர், 14 நவம்பர் (பெர்னாமா) -- நெடுஞ்சாலைகளில் பலவழி விரைவுப் பாதை செயல்முறையின் அமலாக்கத்தை வலுப்படுத்துவதற்கான மூன்று முக்கிய சட்டங்களில் அடுத்த ஆண்டில் திருத்தம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டோல் கட்டணம் செலுத்தாத குற்றம் மற்றும் டோல் கட்டண செயல்முறை தொடர்பான அமலாக்கத்தைச் செயல்படுத்துதல் ஆகியவை அந்த சட்டத் திருத்தத்தில் இடம்பெறும் என்று பொதுப்பணி துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் தெரிவித்தார்.
''ஆனால், நாம் சட்டத்தில் திருத்த செய்ய வேண்டும். அதுதான் தாமதத்திற்குக் காரணம். இச்சட்டத்தில் திருத்தம் செய்வது அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படும்.''
''பாருங்கள், டோல்களின் குறுக்கு கம்பியே இல்லை. அவர்களும் டோல் கட்டணம் செலுத்தாமலேயே கடந்து சென்றுவிடுகின்றனர். பின்னரும், கட்டணம் செலுத்துவதில்லை. அதுதான் தேவையானது.'' என்றார் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான்
வங்ச மாஜு நாடாளுமன்ற உறுப்பினர் ஷஹிர் ஹாசன் இன்று மக்களவையில் எழுப்பியக் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
மேலும், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னர் டோல் கட்டணம் செலுத்தத் தவறும் வாகனமோட்டிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதில் எல்.எல்.எம் அமலாக்கத்தைச் செயல்படுத்தும் என்று அஹ்மாட் மஸ்லான் கூறினார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)