ஈப்போ, 17 நவம்பர் (பெர்னாமா) -- தேசிய இளைஞர் ஹாக்கி அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரும், பேராக் ஹாக்கி அணியின் நிர்வாகியுமான கே. ராஜன் இன்று காலை காலமானார்.
அவருக்கு வயது 68.
ஈப்போ, தாமான் பின்ஜி மேவாவில் உள்ள வீட்டின் குளியலறையில் ராஜன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக அவர்கள் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ராஜனுக்கு மனைவியும், 17 வயது மகனும், 13 வயது மகளும் உள்ளனர்.
தேசிய முன்னாள் விளையாட்டாளரான ராஜன், 1977-ஆம் ஆண்டு கோலாலம்பூர் சீ விளையாட்டுப் போட்டியிலும் 1979-ஆம் ஆண்டு இந்தோனேசியா ஜகார்த்தாவில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியிலும் கலந்து கொண்டார்.
2009-ஆம் ஆண்டு உலக இளைஞர் ஹாக்கி போட்டியில், தேசிய அணியை வழிநடத்தியது உட்பட ஏராளமான அனுபவங்களைக் அவர் கொண்டிருந்தார்.
அவரின் நல்லுடல் ஈப்போ புந்தோங், ஜாலான் மெட்ராஸ்-இல் நாளை காலை மணி 9.30 அளவில் தகனம் செய்யப்படும்
-பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)