பொது

சபா தேர்தல் நிறைவடைந்ததும், மஇகா-வுடன் பேச்சுவார்த்தை

18/11/2025 06:56 PM

பாப்பார், 18 நவம்பர் (பெர்னாமா) -- 17வது சபா மாநிலத் தேர்தல் நிறைவடைந்ததும், மஇகா உயர் தலைமைத்துவத்துடன் தேசிய முன்னணி பேச்சுவார்த்தை மேற்கொள்ளும்.

நீண்டகால உறவுகளைப் பாதிக்காத வகையில் எந்தவொரு பிரச்சனையும் கலந்துரையாடல் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று தேசிய முன்னணியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.

''நானே மஇகாவின் உயர்மட்டத் தலைமையைச் சந்தித்து, எல்லா சிக்கல்களையும் தீர்க்க முயற்சிப்பேன். கொந்தளிப்பில்லாத கடல் இல்லை. கொந்தளிப்பான கடலுக்காகக் காத்திருப்போம். அலைகள் பலமாக உள்ளன, அலைகள் பெரிதாக உள்ளன. முதலில் ஜெட்டியில் நங்கூரமிடுவோம். நம் கப்பலைச் சரிசெய்வோம், ஏதேனும் கசிவுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்வோம்,'' என டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் கூறினார். 

இன்று சபா மெம்பாக்குட் சட்டமன்றத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பின்னர் டத்தோ ஶ்ரீ முஹமட் செய்தியாளர்களிடம் பேசினார்.

கருத்து வேறுபாடுகள் இயல்பானவை என்றாலும் அதை கையாள்வதில் மஇகா தலைமைத்துவம் சரியான பரிசீலனைகளைக் கொண்டிருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ம.இ.கா-வின் 79-வது பேராளர் மாநாட்டில், தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதற்கு 1,500-க்கும் மேற்பட்ட பேராளர்கள் ஒப்புதல் வழங்கியதால் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)