உலகம்

வங்காளதேசத்தில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அறுவர் பலி

21/11/2025 05:30 PM

வங்காளதேசம், 21 நவம்பர் (பெர்னாமா) -- இன்று 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வங்காளதேசத்தை உலுக்கியது.

டாக்கா, கொஷய்துலி பகுதியில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்குள்ள கட்டிடம் ஒன்றின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் குறைந்தது அறுவர் உயிரிழந்தனர்.

மேலும், இந்நிலநடுக்கத்தினால் அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

டாக்காவில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலையில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

பாதுகாப்பு கருதி, வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இருந்த மக்கள் தெருக்களில் ஒன்றுக் கூடினர்.

வங்காளதேச எல்லையை ஒட்டியுள்ள அண்டை நாடான இந்தியாவின் கிழக்கு மாநிலங்களிலும் இந்நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான உடனடி தகவல்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)