கர்ரேரோ, ஜனவரி 03 (பெர்னாமா) -- வெள்ளிக்கிழமை காலை தெற்கு மற்றும் மத்திய மெக்சிகோவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தினால் இருவர் மாண்டனர்.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவை கருவியில் 6.5 ஆக பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பசிபிக் கடற்கரைக்கு அருகில் உள்ள கர்ரேரோ எனும் பகுதியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
உயிரிழந்த இருவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று போலீஸ் கூறியது.
பல கட்டிடங்கள் சேதமடைந்திருப்பதாகவும் போலீஸ் தெரிவித்தது.
நிலநடுக்கம் காரணமாகக் கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்திற்குப் பின்னர் 420 பின்அதிர்வுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)