ஜப்பான், ஜனவரி 6 (பெர்னாமா) -- ஜப்பான் சுகோகு-வின் மேற்கு பகுதியில் இன்று காலை மணி 10.18 அளவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகளும் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் நிலநடுக்கம் கிழக்கு ஷிமானே எனும் இடத்தில் மையம் கொண்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் கூறியது. இருப்பினும் இந்த நிலநடுகத்தினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த விளைவுகளும் ஏற்படவில்லை என்று ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஷின்-ஒசாகா மற்றும் ஹகாட்டா இடையிலான அதிவேக ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக மேற்கு ஜப்பான் ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த பகுதிகளில் ஒன்றான ஜப்பானில் நிலநடுக்கங்கள் இயல்னவை. உலகில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்களில் ஐந்தில் ஒரு பங்கு ஜப்பானில் நிகழ்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)