தும்பாட், நவம்பர் 25 (பெர்னாமா) -- 2025/2026 வடகிழக்கு பருவமழை காலம் முழுவதும் நன்கொடைகள் மற்றும் உதவிகளை வழங்க விரும்பும் தரப்பினர் அதற்கான பணிகளைத் தொடங்கும் முன்னர் பேரிடர் நடவடிக்கை கட்டுப்பாட்டு மையம் PKOBயைத் தொடர்புக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதன் மூலம் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் மற்றும் இடங்கள் குறித்து அவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்று தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனத்தின் தலைமை இயக்குனர் மியோர் இஸ்மாயில் மியோர் அகிம் தெரிவித்துள்ளார்.
வெள்ளப் பேரிடர் நிலைமை மோசமடைந்தால் எந்நேரத்திலும் மனித வளங்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் உபகரணங்களை அதிகரிக்க தங்கள் தரப்பு தயாராக இருப்பதாக மியோர் இஸ்மாயில் கூறினார்.
''அனைத்து அரசு சாரா நிறுவனங்களும் வழங்க விரும்பும் அனைத்து உதவிகளையும் நட்மா வரவேற்கிறது என்பதை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இருப்பினும் வழங்கப்படும் ஒவ்வொரு உதவியும் நாங்கள் வகுத்துள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதை நாங்கள் கட்டுப்படுத்தவில்லை. மாறாக செயல்பாடுகளை மேலும் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் எளிதாக்கவுமே ஆகும்,'' என்றார் மியோர் இஸ்மாயில் மியோர் அகிம்.
இன்று கெட்டிங் தேசிய இடைநிலைப்பள்ளியின் நிவாரண மையத்தைப் பார்வையிட்டபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)