பொது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

24/11/2025 07:14 PM

கோலாலம்பூர், நவம்பர் 24 (பெர்னாமா) -- நாட்டில் ஏழு மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அதன் மாலை நேர நிலவங்கள் படி கெடா மற்றும் திரெங்கானுவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்திக்கும் வேளையில், கிளந்தான், பினாங்கு, பேராக், சிலாங்கூர் ஆகிய மாநிலங்ளில் பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கிளந்தான் மாநில சமூகநலத் துறை ஜே.கே.எம்KM தகவல் மையத்தின்படி கோத்தா பாரு, தும்பாட், பாச்சோக் மற்றும் பாசீர் பூத்தே மாவட்டங்களில் 33 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலையில் 8,248 ஆக இருந்த வேளையில் மாலையில் 3,515 குடும்பங்களைச் சேர்ந்த 9,634 பேர் வரை உயர்ந்துள்ளது.

திரெங்கானு மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று மாலை 4 மணி நிலவரப்படி குறைந்துள்ளது.

பேராக் மாநிலத்தில் மஞ்சோங், பேராக் தெங்கா, லாருட் மாத்தாங் செலாமா மற்றும் பதாங் பாடங் மாவட்டங்களில் 16 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் 290 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேர் தங்கியிருக்கின்றனர்.

பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு நிவாரண மையங்களில் 104 குடும்பங்களைச் சேர்ந்த 404 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் .

இன்று காலை 237 பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது இது அதிகரித்துள்ளது.

செபராங் பிறை வட்டாரத்தில் அதிகாமன மக்கள் பாதிக்கப்பட்டுள்ள வேளயில் அங்குள்ள லஹார் யூய் ஆரம்ப பள்ளியில் பெரும்பாலோனோர் தங்கியுள்ளனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் சுங்கை பச்ஜாங் மற்றும் செக்கின்ச்சான் துணை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தை அடுத்து நேற்று முதல் சபாக் பெர்னாம் மாவட்டத்தில் இரண்டு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் தங்கியிருக்கின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)