கோலாலம்பூர், நவம்பர் 26 (பெர்னாமா) -- இன்று மாலை 6 மணி நிலவரப்படி வெள்ளம் ஏற்பட்டிருக்கும் ஒன்பது மாநிலங்களில் உள்ள 189 நிவாரண மையங்களில் மொத்தம் 28 ஆயிரத்து 10 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சமூகநலத் துறை ஜே.கே.எம் பேரிடர் தகவல்படி 9,770 குடும்பங்கள் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருக்கின்றனர்.
கிளந்தானில் 66 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் 4,174 குடும்பங்களைச் சேர்ந்த 10,987 பேர் தங்கியிருக்கின்றனர்.
பேராக்கில் 5,005 பேரும் கெடாவில் 4,075 பேரும் சிலாங்கூரில் 2,488 பேரும் பெர்லிசில் 2,319 பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், திரெங்கானுவில் 3,081 பேரும் சரவாக்கில் 28 பேரும் பகாங் மாநிலத்தில் 19 பேரும் கோலாலம்பூரில் எண்மரும் வெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமூகநலத் துறை ஜே.கே.எம் தகவல்படி நாடு முழுவதும் உள்ள வெள்ள நிவாரண மையத்தில் 9,058 ஆண்களும் 9,504 பெண்களும் தங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 4,505 சிறுவன்களும் 4,215 சிறுமிகளும் 349 ஆண் குழந்தைகளும் 379 பெண் குழந்தைகளும் அடங்குவர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)