பொது

சபா தேர்தல்; 8,000க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்

27/11/2025 05:28 PM

கோத்தா கினபாலு, நவம்பர் 27 (பெர்னாமா) -- அதே வேளையில், குழுவின் நற்பெயரைப் பாதுகாக்க, சம்பந்தப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் முழு ஒழுக்கத்துடனும், உயர் நிபுணத்துவத்துடனும் தங்கள் கடமைகளை ஆற்றுமாறு டத்தோ ஜௌதே டிகுன் அறிவுறுத்தினார்.

''இந்த பி.ஆர்.என் உடன் இணைந்து சபா மாநிலம் முழுவதும் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு நாங்கள் எச்சரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். அவர்கள் எப்போதும் தங்கள் நிபுணத்துவ நிலையை நிலைநிறுத்தி, நடுநிலையாகவும், நேர்மையாகவும் இருப்பதை உறுதிசெய்ய ஆகும்.

குறிப்பாக, இம்மாதம் 29ஆம் தேதி வாக்களிப்பு என்று எதிர்பார்க்கப்படும் சபா பி.ஆர்.என் காலக்கட்டத்தில் அவர்கள் இந்தக் கடமையை ஆற்றும்போது சீரான, ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யவும் ஆகும்,'' என டத்தோ ஜௌதே டிகுன் கூறினார்.

வியாழக்கிழமை சபா, கோத்தா கினபாலு மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் உறுப்பினர்களுக்கான பிரியாவிடை விழாவில் உரையாற்றியபோது அவர் அவ்வாறு கூறினார்

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)