புத்ராஜெயா, 28 நவம்பர் (பெர்னாமா) -- TABUNG KASIH @ ஹவானா திட்டத்தின் மூலம் உடல்நலம், பொருளாதாரம் மற்றும் தொழில் மறுசீரமைப்பு ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட 18 தமிழ் ஊடக பணியாளர்களுக்கு மொத்தம் 54 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி வழங்கப்பட்டது.
தொடர்பு அமைச்சில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அதன் துணை அமைச்சர் தியோ நி சிங் அந்நிதி உதவியை வழங்கினார்.
2023-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட TABUNG KASIH @ ஹவானா நிதி உதவி திட்டம் மூலம் உதவி பெறுவோரின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில், முந்தைய ஆண்டில் 28-ஆக இருந்த அதன் எண்ணிக்கை கடந்தாண்டு 229 ஆக அதிகரித்திருப்பதோடு, இவ்வாண்டு 300-ஆக இலக்கு கொள்ளப்பட்டிருப்பதாக, தியோ நி சிங் விவரித்தார்.
''இன்றுவரை, இவ்வாண்டு தபூங் காசி@ஹவானா நிதியுதவியைப் பெற்றவர்கள் 323 பேர். ஆனால், இந்த ஆண்டிற்கான எங்களின் முதன்மை செயல்திறன் குறியீடு கே.பி.ஐ-யை அடைந்துவிட்டோம். ஒட்டுமொத்தமாக, இம்மூன்று ஆண்டுகளில் எங்களிடம் 580 பெறுநர்கள் உள்ளனர். மொத்த நிதியுதவி 17 லட்சத்தை எட்டியுள்ளன'', என்றார் அவர்.
உதவி தேவைப்படுபவர்கள் பெர்னாமா செயலகத்தைத் தொடர்புக் கொள்ளலாம் என்று கூறிய அவர், உதவியை வழங்குவதற்கு முன்னர் அதற்கான விண்ணப்பத்தின் தகுதியைத் தீர்மானிக்க ஒரு பரிசோதனை செயல்முறை மேற்கொள்ளப்படும் என்று, தியோ விவரித்தார்.
இதனிடையே, TABUNG KASIH @ ஹவானா நிதியுதவி மூலம் பயன்பெற்ற ஊகடவியலாளர்கள் சிலர் தங்களின் மகிழ்ச்சியைப் பெர்னாமாவிடம் பகிர்ந்து கொண்டனர்.
வாழ்வியல் சிக்கல்களை எதிர்நோக்கும் ஊடக பணியாளர்களுக்கு உதவும் நோக்கில், அடுத்தாண்டும் Tabung Kasih@ ஹவானா நிதியுதவி திட்டம் தொடரும் என்று தியோ நம்பிக்கை தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)