உலகம்

டிட்வா புயலின் தாக்கம்; 410 பேர் பலி

03/12/2025 05:19 PM

கெலனியா, டிசம்பர் 03 (பெர்னாமா) -- இலங்கையில் டிட்வா புயலின் தாக்கத்தால் இதுவரை குறைந்தது 410 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதி அமைப்பு யுனிசெஃப் கூறியுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புக்கு அருகில் உள்ள கெலனியா பகுதியில் உள்ள கட்டிடங்களும் வாகனங்களும் வெள்ள நீரில் மூழ்கி இருக்கும் காட்சிகளை ஆளில்லா விமானங்களின் மூலம் யுனிசெஃப் பதிவு செய்துள்ளது.

இந்த மோசமான வெள்ளத்தினால் குடிநீர், சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை சேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக யுனிசெஃப் பேச்சாளர் ரிக்கார்டோ பிரெஷ் தெரிவித்தார்.

நிலச்சரிவுகள் ஏற்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள உடல்களை மீட்க நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் போலீசாரும் தேடல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தெற்கு மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் அண்மைய நாட்களாக வீசிய மோசமான புயலால், இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்தின் பெரும் பகுதிகள் பாதிக்கப்பட்டன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)