பொது

பல்வேறு இலவச சுகாதார பரிசோதனைகள்

06/12/2025 02:19 PM

புத்ராஜெயா, டிசம்பர் 06 (பெர்னாமா) -- புத்ராஜெயாவில் மூன்று நாள்களுக்கு நடைபெறும் RANCAKKAN MADANI BERSAMA MALAYSIAKU நிகழ்ச்சியில் பல்வேறு விரிவான சுகாதார பரிசோதனைகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

கண் பரிசோதனை, ஆண்களுக்கான சுகாதார பரிசோதனை, B40 பிரிவினருக்கான பரிசோதனைகள் உட்பட அழகு மற்றும் தோல் பராமரிப்பு தொடர்பான ஆலோசனைகளும் இதில் அடங்கும் என்று சுகாதார அமைச்சின் நிர்வகிப்பு சேவை பிரிவுச் செயலாளர் ரோஸ்னினா யாக்கோப் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் stem cell செல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ புத்தாக்கங்கள் உட்பட சுகாதார ஆலோசனைகளிலும் தேசிய சுகாதார கழகம் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

''வெளியே எங்களிடம் நகரும் சிகிச்சையளிப்பு சேவை உள்ளது. பல் மருத்துவ சேவை, மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் நுரையீரல் பரிசோதனை ஆகியவையும் உள்ளன. ஒரே நேரத்தில் குறைந்தது நான்கு நோயாளிகளுக்கு அடிப்படை பல் சிகிச்சையை வழங்க இரண்டு நகரும் சிகிச்சையளிப்பு உபகரணங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன,'' என்றார் ரோஸ்னினா யாக்கோப்.

காலை மணி 9 தொடங்கி இரவு மணி 10 வரை மூன்று நாள்களுக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சுமார் மூன்று லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)