கோலாலம்பூர், டிசம்பர் 06 (பெர்னாமா) -- சிலாங்கூர், காஜாங், தாமான் ப்ரிமா சௌஜானாவில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் அவரைத் தேடி கண்டுபிடிக்கும் பொருட்டு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.
கடந்த வியாழக்கிழமை நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டு இன்னும் கண்டுப்பிடிக்கப்படாத அந்த 14 வயது இளைஞரைத் தேடும் நடவடிக்கை சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கொள்ளப்படும் என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ACP நஸ்ரோன் அப்துல் யூசுப் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அந்த இளைஞரைத் தேடும் பணிகள் இன்னும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தை உட்படுத்தி இரு இடங்களில் தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் நஸ்ரோன் அப்துல் யூசுப் தெரிவித்தார்.
அரச மலேசியப் போலீஸ் படை PDRM, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை JBPM, மலேசிய பொது தற்காப்பு படை APM ஆகியவற்றின் 65 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இந்த தேடல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
JBPMஇன் K9 மோப்ப நாய்கள், SKUBA பிரிவு, APMஇன் ஆளில்லா விமானக் குழு மற்றும் 2 Whally படகுகள் ஆகியவையும் தேடல் பணியில் உட்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை பெரிய கால்வாயின் நீரோட்டத்தில் தமது தம்பியோடு அந்த இளைஞரும் அடித்துச் செல்லப்பட்டப்பட்டதைப் போலீஸ் முன்னதாக உறுதிபடுத்தியது.
இரவு மணி 7.47க்கு கண்டெடுக்கப்பட்ட அந்த இளைஞரின் 12 வயதுடைய தம்பி இரவு மணி 10க்கு உயிரிழந்தான்.
பாதிக்கப்பட்ட அந்த இளைஞரைத் தேடும் பணிகள் இன்னும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தை உட்படுத்தி இரு இடங்களில் தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் நஸ்ரோன் அப்துல் யூசுப் தெரிவித்தார்.
அரச மலேசியப் போலீஸ் படை PDRM, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை JBPM, மலேசிய பொது தற்காப்பு படை APM ஆகியவற்றின் 65 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இந்த தேடல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
JBPMஇன் K9 மோப்ப நாய்கள், SKUBA பிரிவு, APM-இன் ஆளில்லா விமானக் குழு மற்றும் 2 Whally படகுகள் ஆகியவையும் தேடல் பணியில் உட்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை பெரிய கால்வாயின் நீரோட்டத்தில் தமது தம்பியோடு அந்த இளைஞரும் அடித்துச் செல்லப்பட்டப்பட்டதைப் போலீஸ் முன்னதாக உறுதிபடுத்தியது.
இரவு மணி 7.47க்கு கண்டெடுக்கப்பட்ட அந்த இளைஞரின் 12 வயதுடைய தம்பி இரவு மணி 10க்கு உயிரிழந்தான்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)