பொது

உயிரிழந்த மகளின் சடலத்துடன் பல நாட்கள் வசித்தார் பார்வைக் குறைபாடுள்ள மூதாட்டி

06/12/2025 06:34 PM

உயிரிழந்த மகளின் சடலத்துடன் பல நாட்கள் வசித்தார் பார்வைக் குறைபாடுள்ள மூதாட்டி

சந்துபோங், டிசம்பர் 06 (பெர்னாமா) -- உயிரிழந்த தமது மகளின் சடலத்துடன் பல நாட்கள் வசித்து வந்த பார்வைக் குறைபாடுள்ள மூதாட்டி ஒருவர் செரி கெனாங்கன் பராமரிப்பு இல்லத்தில் தங்க வைக்கப்படுவார்.

69 வயதான அந்த மூதாட்டியின் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ள அவருக்கு உடல் மற்றும் மனநல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக மகளிர் குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்.

''அவர் ஶ்ரீ கெனாங்கா பராமரிப்பு இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மருத்துவ (பரிசோதனைகள்) வழங்கப்படும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஶ்ரீ கெனாங்கா இல்லத்தில் வசிப்பது சிறந்தது என்று நான் கருதுகிறேன். காரணம் அவர் தனிமையில் இருக்கிறார்,'' என்றார் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி.

இன்று கம்போங் புடாயா சரவாக்கில் 2025 சரவாக் Gastronomi Nyamai விழாவில் கலந்து கொண்டபோது டத்தோ ஶ்ரீ நேன்சி அவ்வாறு குறிப்பிட்டார். 

கோத்தா சமரஹானில் உள்ள ஜாலான் கம்பூங் ஜாலான் கம்போங் தெலுக் சுபாங்கில் தனது மகளின் உடலுடன் பல நாட்கள் வாழ்ந்த பார்வைக் குறைபாடுள்ள மூதாட்டி ஒருவர் உதவி பெற சுமார் 150 மீட்டர் தூரம் தவழ்ந்து செல்ல வேண்டியிருந்ததாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

நவம்பர் 30ஆம் தேதி 48 வயதான தமது மகள் நெஞ்சு வலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததை அறிந்திருந்தும் செய்வதறியாமல் பொருத்துக் கொள்ள முடியாத துர்நாற்றம் ஏற்பட்ட பின்னரே அந்த மூதாட்டி உதவியை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகக் கோத்தா  சமரஹானில் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரின்டெண்டன் டமாட்டரீஸ் லாடின் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)